என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் வேலுமணி"
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது. இதுகுறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருநாவுக்கரசு என்பவர் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்
அதேபோல, உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வழக்கு தொடர்ந்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும், உள்ளாட்சி துறையில் முறைகேட்டில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும் மு.க. ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே பேசியதற்காக மு.க.ஸ்டாலின் ரூ 100 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு பதிலளிக்கும்படி மு க ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அமைச்சர் வேலுமணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். #SPVelumani #MKStalin #HighCourt
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள் கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் வேலுமணி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தனக்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் நேரத்தில் அவதூறு பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும் என வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.
இதேபோல தடை கோரி ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மார்ச் 8-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு மார்ச் 8-ந் தேதிக்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவிட்டு, ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள் தாக்கல் செய்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணை தள்ளிவைத்தார். #MadrasHC
கோவை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.விழாவில் தையல் எந்திரங்கள், சலவை எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி கலைந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கனவு கண்டார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறந்த ஆட்சியையும், நிலையான ஆட்சியையும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நல திட்டங்கள் ஜெயலலிதா வழியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது கிராமங்களுக்கு செல்லாமல் இப்போது கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 12,564 கிராமங்களுக்கும் நல்ல சாலைகளை அமைத்து கொடுத்துள்ளோம்.
பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் வெற்றி கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி அமைத்தது முதல் ஸ்டாலின் குழப்பத்தில் தவித்து வருகிறார். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார். #ministerspvelumani #admk
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அளித்த பதில் வருமாறு:-
பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் கிடைப்பது இல்லை. இதை கருத்தில் கொண்டு கசடு கழிவு அகற்றும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.
அதன்படி ரூ.200 கோடி செலவில் 51 நகரங்களிலும், 59 பேரூராட்சிகளிலும், 49 நகரங்களிலும் கசடு கழிவு அகற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடியாத இடங்களில் கழிவுநீர் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #SPVelumani
நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது-
தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
நாராயணசாமி நாயுடுவுக்கு அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரது வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என 14.6.2017-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தது.
இதற்காக 20.1.2018-ல் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
இந்த அரசின் முதல்வர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தானே முதல்-அமைச்சராக உள்ளார் என இந்த ஆட்சியை 10 நாளில், ஒரு மாதத்தில் கலைத்து விடுவோம் என எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் கூறியது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கான்கிரீட் போட்டு ஸ்டிராங்காக உட்கார்ந்து உள்ளார். இந்த ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. விவசாயிகள் உள்பட அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
கோவையில் 400 ஏக்கரில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சமீபத்தில் நடைபெற்ற 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதுவரை பதவியில் இருந்தவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 50 ஆண்டு இல்லாத அளவுக்கு கோவை மாவட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது. 70 ஆண்டு கனவான அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நமது முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார்.
கோவை அரசு ஆஸ்பத்திரி தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. காந்திபுரம் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் 80 சதவீத விபத்து குறைந்துள்ளது. திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அவினாசி சாலை மேம்பாலம் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளது. தாய்லாந்து, பெங்களூருவில் உள்ளது போல் இந்த மேம்பாலம் அமையும். இந்த ஆட்சியில் அனைத்து மக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார். #SPVelumani
சென்னை ஐகோர்ட்டில், அறப்போர் இயக்கம் சார்பில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவை மாநகராட்சிக்கு மட்டும் கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ரூ. 66 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள 188 டெண்டர்கள் குறிப்பிட்ட 2 ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள்.
எனவே, அமைச்சருக்கு எதிரான புகார் குறித்து தமிழக கவர்னரிடம் ஒப்புதல் பெற்று, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஐகோர்ட்டு உருவாக்கவேண்டும்.
இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு, குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, தமிழக தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #MinisterSPVelumani #HighCourt
டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்த பின் அமைச்சர் வேலுமணி செய்தியார்களிடம் கூறியதாவது:
தேவையான நிதியை பெற்றுத்தருமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தோம். மத்திய அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். மேகதாது அணை கட்ட விடமாட்டோம். கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterVelumani
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஊழல், சென்னை மாநகராட்சியில் எவ்வித அச்சம் நாணமுமின்றி தலை விரித்தாடுவது அதிர்ச்சி அளிக்கிறது.
புதிதாக பேருந்து மற்றும் உள்ளூர் சாலைகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் மழைநீர்க் கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல், அமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் கைகோர்த்து அமைத்துள்ள கூட்டணியை உறுதி செய்திருக்கிறது.
சென்னை பெருநகர வளர்ச்சித்திட்டத்தின் கீழும், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்புக் கழக நிதியின் கீழும் நடைபெற வேண்டிய பணிகளுக்கான டெண்டர்களில் நிகழ்ந்துள்ள வரலாறு காணாத மோசடியும், முறைகேடுகளும் அ.தி.மு.க. அரசின் “கமிஷன், கலெக்சன், கரெப்ஷன்” என்ற ஊழல் சாக்கடை நிரம்பிய நிர்வாகத்திற்கு சான்றாவணமாக நிற்கிறது.
சென்னை மாநகராட்சி டெண்டர்களில் சிண்டிக்கேட் அமைத்து ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் டெண்டர் போட்டுக் கொண்டுள்ளார்கள்; அந்த டெண்டர்கள் சென்னை மாநகராட்சி விலைப்பட்டியலை விட 30 முதல் 50 சதவீதம் வரை அதிகமாக உள்ளது; பிடுமென் போடுவதற்கு விலைப்பட்டியலை விட 100 சதவீத விலை அதிகமாக போட்டிருக்கிறார்கள்.
சிமெண்ட் சாலைகள் போட ரெடிமிக்ஸ் எம்30 சிமெண்ட் கான்டிராக்ட் விலை 50 சதவீதம் அதிகம் போடப்பட்டுள்ளது; 30 நாட்கள் டெண்டர் நோட்டீஸ் காலம் ஊழலுக்கு வழி விட 15 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது; சில டெண்டர்களில் கணவனும் மனைவியுமே போட்டியாளர்களாக டெண்டர் போட்டு தங்களுக்குள் பணியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்;
ஏற்கனவே தன் உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய புகார் அமைச்சர் மீது அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் உறவினர்களுக்கே டெண்டர் வழங்கி ஊழல் செய்து வரும் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரபூர்வமான ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க. அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் ஊழல் புகார் என்றால் அஞ்சி நடுங்கி பதுங்கிக் கொள்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அதன் ஊழல் ஒழிப்பு முழக்கத்தையே சாக்கடைக்குள் தள்ளியிருக்கிறது.
ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி ஊழலை மறைத்துக் கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் இப்போது இந்த மெகா டெண்டர் ஊழலையும் மூடி மறைக்க உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு துணை போகிறார். டெண்டர் முறைகேடுகளுக்கு அவரே முன் வந்து ஊழல் புகார் கொடுக்காமல், 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் 57 கோடி மதிப்புள்ள டெண்டர்களை மட்டும் “வெத்து வேட்டான” வேறு சில காரணங்களைச் சொல்லி ரத்து செய்திருப்பது, ஊழலில் அமைச்சரும் மாநகராட்சி ஆணையரும் கூட்டுச் சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“சென்னை மாநகராட்சியில் உள்ள விஜிலென்ஸ் அமைப்பை கூண்டோடு கலைக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்து தடையுத்தரவு பெற்றது இப்படி சென்னை மாநகராட்சியில் கொள்ளையடிக்கவா? உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல்களை “பட்டுக் கம்பளம்” போர்த்தி மறைக்கவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆகவே 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி பணிக்கான டெண்டர்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை எவ்வித தாமதமும் இன்றி நடவடிக்கை எடுத்து, ஊழலுக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகள், துறை அமைச்சர் வேலுமணி இந்த ஊழலை இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாநகராட்சி “விஜிலென்ஸ் அதிகாரிகள்” அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பணியில் குறிப்பாக சென்னைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளில் நடைபெறும் ஊழல்களை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அதையும் மீறி நடவடிக்கை எடுக்கத் தவறினால் தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin
தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் தடவையாக நேற்று தஞ்சைக்கு வந்தார்.
தஞ்சையில் இன்று நடைபெறும் பல்வேறு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் வரும் போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நேற்று மாலை பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா சிறைக்கு சென்றார். அதன் பின் அதிர்ஷடத்தில் விபத்து போல் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார்.
பொதுப் பணித்துறையையும், நெடுஞ்சாலைத்துறைகளையும் தன்வசம் வைத்து கொண்டு இதன் மூலம் ரூ.3ஆயிரம் கோடி வரை அவருடைய உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி ஊழல் செய்துள்ளார்.
முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்- அமைச்சர் மட்டுமின்றி அமைச்சர்களும் ஊழலில் திளைத்து வருகின்றனர். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஐயபாஸ்கர் ஆகியோர் மீது சி.பி.ஐ. விசாரணை வந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா இறந்த பிறகு அவர் செய்த ஊழலை விட எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது.
இந்தியாவிலேயே ஒரு முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான். எனவே இதற்கு பிறகாவது எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இதை தான் மாற்று கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களும் விரும்புகின்றனர். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #EdappdiPalaniswami
கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா டூரிஸ்ட் டாக்சிஓட்டுனர் தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங்க தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.
தமிழகத்திற்கு கனமழை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டு உள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 15 மண்டலத்தில் ஒரு மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதே போல் அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர்கள் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
மழையால் தேங்கும் நீரை உறிஞ்ச பம்பு செட், மரம் அறுக்கும் எந்திரம், ஜே.சி.பி. எந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மழை அதிகமாக பெய்யும் இடங்களை கண்டறிந்து அதனை சமாளிக்கும் நிலை இருக்கிறது. பொது மக்களுக்கு தங்கும் இடங்கள், உணவு தயார் நிலையில் உள்ளது.
திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஆர்.கே. நகரில் 20 ரூபாய் நோட்டுகள் கொடுத்தது போல் திருப்பரங்குன்றத்தில் இது செல்லுபடியாகாது. தினகரன் கனவு பலிக்காது.
எடப்பாடியும், ஒ.பி.எஸ்சும் அண்ணன்-தம்பியாக இருக்கிறார்கள்.
தினகரன் 10 வருடங்கள் கட்சியில் இல்லை. அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. தினகரனுக்கு ஓ.பி.எஸ். முழுமையாக பதில் அளித்துள்ளார். தினகரன் பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை என்றார்.
அவரிடம் துணை வேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியிருப்பதாக கவர்னர் பன்வாரிலால் குற்றம்சாட்டி உள்ளாரே? என கேட்டதற்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார். #ADMK #SPVelumani #Thirupparankundram
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்